அசத்தும் அறுவா மீசை

பஞ்சாபி குடும்பத்தில் இருந்து வந்து, முறுக்கு மீசை வைத்திருப்பது மிகவும் பிடித்துள்ளது,’’ என, ஷிகர் தவான் தெரிவித்தார்.

இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான், 28. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில், 187 ரன்கள் குவிக்க, ஒரே இரவில் பிரபலம் ஆகிவிட்டார்.

இத்துடன் சேர்த்து, ஷிகர் தவானின் முறுக்கு மீசையும் பிரலம் ஆனது. இவரைப் போல ரவிந்திர ஜடேஜாவும் மீசையுடன் தான் வலம் வருகிறார். இப்போது தேசிய அளவில் இளைஞர்களிடம் ‘மீசை’ பிரபலமாகி வருகிறது.

ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணி கேப்டனாக உள்ள ஷிகர் தவான், இதுகுறித்து கூறியது:

பஞ்சாபி குடும்பத்தில் இருந்து வந்த நான், முறுக்கு மீசை ‘வைத்துள்ளேன். இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த ஸ்டைலை அனைவரும் விரும்புவது உற்சாகமாக உள்ளது.

இந்த ‘அருவா’ மீசை இவ்வளவு வேகத்தில் பிரபலம் ஆகும் என்று எதிர்பார்க்கவே இல்லை. 

இளைஞர்களிடம் இது இப்படி வேகமாக பரவியதற்கு கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

இவ்வாறு ஷிகர் தவான் கூறினார்.

0 comments:

Post a Comment