இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட டோனி

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.  முதலில் ஆடிய பஞ்சாப் அணி அதிரடியாக ஆடி 226 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது வாணவேடிக்கையை காண்பித்தார்.  அவர் சென்னை அணி வீரர்கள் வீசிய பந்துகளை சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் விளாசி தள்ளினார். பின்னர் வெற்றிக்கு 227 ரன்கள் தேவை என்ற கடினமான...

சுரேஷ் ரெய்னா கேப்டன் - டெஸ்ட் அணியில் மீண்டும் காம்பிர்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் கவுதம் காம்பிர் மீண்டும் இடம் பிடித்தார். அடுத்த மாதம் இறுதியில் (ஜூன் 26 – செப்., 7) இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, ஐந்து டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கு தயாராகும் விதமாக, இந்திய அணி, மூன்று போட்டிகள் (ஜூன்...

IPL 7 - சென்னை-மும்பை நாளை எலிமினேட்டர் ஆட்டம்

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் 2 இடங்களை பஞ்சாப், கொல்கத்தா பிடித்தன. 3–வது இடத்தை சென்னை சூப்பர் கிங்சும், 4–வது இடத்தை மும்பை இந்தியன்சும் பிடித்தன. இந்த இரு அணிகளும் மும்பையில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். ஜெயிக்கும் அணி குவாலிபையர் ஆட்டத்தில் தோற்ற அணியுடன் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்குள்...

மீண்டும் இந்தியா–பாக்., தொடர் : அக்ரம் வலியுறுத்தல்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் நடத்தப்பட வேண்டும்,’’ என, கோல்கட்டா அணியின் பவுலிங் பயிற்சியாளர் வாசிம் அக்ரம் வலியுறுத்தினார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், 47. சிறந்த வேகப்பந்துவீச்சாளரான இவர், 104 டெஸ்ட் (414 விக்கெட்), 356 ஒருநாள் (502 விக்கெட்) போட்டிகளில் விளையாடினார். தற்போது இவர், 7வது ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் கோல்கட்டா அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக உள்ளார். இந்தியா, பாகிஸ்தான்...

2012-ம் ஆண்டில் உமர்அக்மலை அணுகிய சூதாட்ட தரகர்?

பாகிஸ்தான் அணி 2012–ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் இங்கிலாந்துடன் விளையாடியது, அப்போது அந்த அணி வீரர் உமர் அக்மலை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்தியாவில் உள்ள சூதாட்ட தரகர் ஒருவர் அவருடன் தொடர்பு கொண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுமாறு 3 முறை வலியுறுத்தி உள்ளார்.  சூதாட்டத்தில் ஈடுபட மறுத்து உமர்அக்மல் இது குறித்து ஊழல் தடுப்பு அதிகாரியிடம் உடனே தகவல் கொடுத்து இருக்கிறார். இதேபோல ஐ.சி.சி.க்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது...

உலக கோப்பை கவுன்ட் டவுண்

உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகள் (தென் கொரியா, ஜப்பான்) இணைந்து 17வது தொடரை 2002ல் நடத்தின.  அதுவும் ஆசிய மண்ணில் முதன்முறையாக நடந்த இத்தொடரில் மொத்தம் 32 அணிகள், எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதல் சுற்றில் மோதின. இத்தொடரில் அதிர்ச்சி தோல்விகளுக்கு பஞ்சமில்லை. ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய பிரான்ஸ் அணி, முதல் சுற்றின் 3 போட்டியிலும் தோல்வியடைந்து வெளியேறியது.  இதேபோல முன்னாள் சாம்பியன்கள் அர்ஜென்டினா, உருகுவே  அணிகளும், முதல் சுற்றுடன் திரும்பின. கொரியா சாதனை காலிறுதியில் அசத்திய...

ஐ.சி.சி.,க்கு திறமை இல்லை - மெக்கலம் வக்கீல் தாக்கு

சூதாட்டம் குறித்து தெரிவித்த போதும், போதிய நடவடிக்கை எடுக்கும் திறமை ஐ.சி.சி.,க்கு இல்லை,’’ என, பிரண்டன் மெக்கலத்தின் வக்கீல் கரேத் கலோவே தெரிவித்தார்.   கடந்த 2008ல் இந்தியாவில் முதல் ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் கோல்கட்டா அணிக்காக பங்கேற்றார் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட இவரிடம் ஒருவர் அணுகியதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) மெக்கலம், வாக்குமூலம் கொடுத்திருந்தார். இத்தகவல், இங்கிலாந்து...

அசத்தும் அறுவா மீசை

பஞ்சாபி குடும்பத்தில் இருந்து வந்து, முறுக்கு மீசை வைத்திருப்பது மிகவும் பிடித்துள்ளது,’’ என, ஷிகர் தவான் தெரிவித்தார். இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான், 28. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில், 187 ரன்கள் குவிக்க, ஒரே இரவில் பிரபலம் ஆகிவிட்டார். இத்துடன் சேர்த்து, ஷிகர் தவானின் முறுக்கு மீசையும் பிரலம் ஆனது. இவரைப் போல ரவிந்திர ஜடேஜாவும் மீசையுடன் தான் வலம் வருகிறார். இப்போது தேசிய அளவில் இளைஞர்களிடம் ‘மீசை’...

IPL 7 அடுத்த சுற்று வாய்ப்பு யாருக்கு?

மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேற முயற்சிப்போம்,’’ என,  யுவராஜ் சிங் தெரிவித்தார்.       ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் பாதிக்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் முடிந்தவிட்டன. பஞ்சாப், சென்னை அணிகள் பங்கேற்ற 9 போட்டிகளில், தலா 7ல் வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டன.        மீதமுள்ள 5 போட்டிகளில் இந்த அணிகள் ஏதாவது ஒன்றில் வென்றால் கூட, அடுத்த சுற்றுக்கு சென்று விடும். இதேபோல, ராஜஸ்தான் அணி 9ல் 6 வெற்றியுடன், 12 புள்ளிகள் பெற்றுள்ளது....

சென்னைக்கு நோ - பெங்களூருவில் பைனல்

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் பைனல், மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. சென்னையில் நடக்க இருந்த நான்கு போட்டிகளும் இடம் மாறின. ஏழாவது ஐ.பி.எல்., தொடரில், பல்வேறு போட்டிகள் திட்டமிட்ட இடங்களில் இருந்து வேறிடங்களுக்கு மாற்றப்படுகின்றன.  காலரி தொடர்பான பிரச்னை தீராத நிலையில், சென்னையில் மே 18 (சென்னை–பெங்களூரு), மே 22ல் (சென்னை–ஐதராபாத்), நடக்க இருந்த லீக் போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றப்பட்டன. தவிர, மே 27, 28ல் சென்னையில் நடக்க...

விராத் கோஹ்லி நம்பர் 1

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார். பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 5வது இடத்தில் உள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வௌியிட்டது.  இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 881 புள்ளிகளுடன்...

கோஹ்லி, புஜாரா முக்கியப்பங்கு

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கோஹ்லி, புஜாரா முக்கியப்பங்கு வகிப்பார்கள்,’’ என, இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் பீட்டர்சன் தெரிவித்தார்.  இந்திய அணி கடந்த 2011ல் இங்கிலாந்து சென்றது. டெஸ்ட் தொடரை 0–4 என இந்தியா மோசமாக பறிகொடுத்தது. இதன் முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.  இந்நிலையில், இந்தியா (ஜூலை 9– செப்.7) மீண்டும் இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட், 5 ஒரு நாள், 1 ‘டுவென்டி–20’யில்...

சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல்., போட்டி நடக்குமா?

சென்னையில் நடக்கும் ‘பிளே ஆப்’ போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.        ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் சென்னையில் மே 18 (சென்னை–பெங்களூரு), மே 22ல் (சென்னை–ஐதராபாத்), இரு லீக் போட்டிகள் நடக்கின்றன. மே 27, 28ல் ‘பிளே ஆப்’ போட்டிகள், அதாவது தகுதிச்சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் என, மொத்தம் இந்த ஆண்டு 4 போட்டிகள் மட்டுமே நடக்கவுள்ளன.         போட்டி நடக்கும் சென்னை சேப்பாக்கம்...

20 ஓவர் கிரிக்கெட்டில் டோனி சாதனை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை சாய்த்து 5-வது வெற்றியை பதிவு செய்தது. சென்னை கேப்டன் டோனிக்கு ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இது 100-வது (169 ஆட்டத்தில்) வெற்றியாக அமைந்தது.  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்சுக்காக 63 வெற்றிகள், சாம்பியன்ஸ் லீக்கில் சென்னை சூப்பர் கிங்சுக்காக 10 வெற்றிகள், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 27 வெற்றிகளை அவர் தேடித் தந்துள்ளார். இந்த மைல் கல்லை எட்டிய முதல் வீரர் இவர் தான். இந்த சாதனை பட்டியலில் டோனிக்கு...

டுவென்டி–20 ரேங்கிங்கில் இந்தியா முதலிடம்

ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ தரவரிசையில் இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. டெஸ்ட் ரேங்கிங்கில் (தரவரிசை) 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது.               டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட ஆண்டு இறுதி ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வௌியிட்டது.         ...