தோனி, ரெய்னாவிடம் விசாரணை - விரைவில் சூதாட்ட அறிக்கை தாக்கல்

ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்து முத்கல் தலைமையிலான குழு, கேப்டன் தோனி, இவரது நண்பர் அருண் பாண்டே மற்றும் ரெய்னாவிடம் விசாரணை நடத்தியது. இந்த வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆறாவது ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில், ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு தலைமையிலான குழு நேரடியாக விசாரிக்கிறது.  இதன் முதற்கட்ட அறிக்கையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மற்றும் இந்திய அணி...

ஆறாவது இடத்தில் இந்தியா - டெஸ்ட் தரவரிசையில் பின்னடைவு

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி, 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பாகிஸ்தான் அணி 5வது இடத்துக்கு முன்னேறியது.       சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்காக தரவரிசைப் பட்டியல் (‘ரேங்க்’) வெளியிடப்பட்டது.              இதில் இந்திய அணி 96 புள்ளியுடன் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த 2011ல் ‘நம்பர்–1’ இடத்தில் இருந்த இந்திய அணி, இதன்...

முறைகேடு செய்ததா கபில் நிறுவனம்?

மைதானத்தில் விளக்கு பொருத்தியதில் நடந்த முறைகேடு குறித்து, கபில்தேவ் நிறுவனம் மீது அரசு விசாரணை நடத்த வேண்டும் என, கோவா கிரிக்கெட் சங்கம் (ஜி.சி.ஏ.,) கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், 55. கடந்த 1983ல் உலக கோப்பை வென்று தந்தார்.  இவர், ‘தேவ் முஸ்கோ லைட்டிங்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் சார்பில் கோவா கிரிக்கெட் மைதானத்தில், ஒளி விளக்கு பொருத்தும் பணி நடந்தது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக...

ஆஸ்திரேலிய அணியில் பிளிண்டாப்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் ‘டுவென்டி–20’ தொடரில் விளையாட, முன்னாள் இங்கிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ பிளிண்டாப், பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இங்கிலாந்து அணியின் முன்னாள் ‘ஆல்–ரவுண்டர்’ ஆன்ட்ரூ பிளிண்டாப், 36. இதுவரை 79 டெஸ்ட் (3845 ரன்கள், 226 விக்.,), 141 ஒருநாள் (3394 ரன்கள், 169 விக்.,), 7 சர்வதேச ‘டுவென்டி–20’ (76 ரன், 5 விக்.,) போட்டிகளில் விளையாடிய இவர், கடந்த 2009ல் ஓய்வை அறிவித்தார்.  தற்போது இவர், ஆஸ்திரேலியாவில்...

இந்திய இளம் வீரர் இரட்டை சதம்

ரயில்வே அணிக்கு எதிரான 19வயது கிரிக்கெட் 50 ஓவர் போட்டியில், ராஜஸ்தானின் ஆதித்யா கார்வல், 263 ரன்கள் எடுத்து அசத்தினார். இளம் வீரர்கள் (19 வயது) பங்கேற்கும், வினோ மன்கட் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதன், மத்திய மண்டலத்தை சேர்ந்த ராஜஸ்தான், ரயில்வே அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆதித்யா கார்வல், 151 பந்துகளில், 18 சிக்சர், 22 பவுண்டரி உட்பட, மொத்தம் 263 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 50 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 413 ரன்கள் குவித்தது. பின் களமிறங்கிய ரயில்வே அணி, 42.2 ஓவரில் 147 ரன்னுக்கு சுருண்டு,...

யூனிஸ் கான் சாதனை சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் சதம் அடித்தார்.  இதையடுத்து, டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.  பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத்...

ரூ. 400 கோடி கொடு - இழப்பீடு கேட்கிறது பி.சி.சி.ஐ

இந்திய தொடரில் இருந்து பாதியில் விலகிய வெஸ்ட் இண்டீசுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. சுமார் ரூ. 400 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வலியுறுத்தியுள்ளது.     வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு (டபிள்யு.ஐ.சி.பி.,), வீரர்கள் சங்கம் இடையில் சமீபத்தில் புதிய சம்பள ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் 75 சதவீத அளவுக்கு சம்பளம் குறைந்ததால், வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனையடுத்து இந்தியாவுக்கு எதிரான...

தோனியின் நம்பிக்கை நாயகன்

கேப்டன் தோனியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளார் முகமது ஷமி. இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 24. இதுவரை 35 ஒருநாள் போட்டிகளில் 66 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.  சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 டெஸ்டில் 5 விக்., மற்றுள் 4 ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் மட்டும் சாய்த்தார். இதையடுத்து, கடினமான பயிற்சியில் ஈடுபட்ட ஷமி, பந்தை ‘லேட் சுவிங்’ செய்வதில் மீண்டும் அசத்த துவங்கியுள்ளார்.  இதற்கான...

இந்திய அணியின் நம்பர் 1 அம்போ

மூன்றாவது போட்டி ரத்தானதால், ஒருநாள் அரங்கில் ‘நம்பர்–1’ இடம் பெறும் இந்திய அணியின் கனவு தகர்ந்தது.              இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது.  பின், டில்லியில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, தொடர் 1–1 என சமநிலை ஆனது. அடுத்த மூன்று போட்டிகளிலும் இந்தியா வென்றால், இரண்டாவது இடத்தில்...

நான்காவது போட்டிக்கு சிக்கல்

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி(அக்., 17) திட்டமிட்டபடி  நடக்குமா என, சந்தேகம் எழுந்துள்ளது.                    இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா, தரை மட்டத்தில் இருந்து 6,800 அடி உயரத்தில் உள்ளது.  இங்கு வீரர்களை ஏற்றிச் செல்ல விமான நிறுவனங்கள் மறுக்கின்றன.  இங்கு விமானம் தரையிறங்கும் இடம் சிறியது என்பதால், மிகவும் துல்லியமாக, தரையிறக்க வேண்டும். தவிர,...