400 கோல்களை கடந்தார் மெஸ்சி

ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து கிளப் போட்டியில் பார்சிலோனா கிளப்புக்காக ஆடும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) , கிரனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல் அடித்தார்.  இதில் பார்சிலோனா 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.  இந்த இரண்டு கோல்களையும் சேர்த்து மெஸ்சியின் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 400-ஐ கடந்தது. கிளப் மற்றும் அர்ஜென்டினா அணிக்காக அவர் இதுவரை 524 ஆட்டங்களில் விளையாடி 401 கோல்கள் அடித்திருக்கிறார்.  இது போன்ற மைல்கல்லை தொடுவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை என்று மெஸ்சி கூறியிருக்கிறார்...

ஹாட்ரிக் வெற்றிக்கு கோல்கட்டா ரெடி

இந்தியாவில் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இன்று ஐதராபாத்தில் நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் கோல்கட்டா அணி, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர் கொள்கிறது.  கடந்த இரு போட்டிகளில் வென்ற கோல்கட்டா அணி, இம்முறை மூன்றாவது வெற்றி பெற காத்திருக்கிறது. பலமான துவக்கம்:  கோல்கட்டா அணியை பொறுத்தவரை சென்னை, லாகூர் அணிகளை வீழ்த்தி சிறப்பான நிலையில் உள்ளது.  கடந்த போட்டியில் மிரட்டிய ராபின் உத்தப்பா,...

சென்னை வலையில் தப்புமா டால்பின்ஸ்

பெங்களூருவில் இன்று நடக்கும் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் சென்னை, தென் ஆப்ரிக்காவின் டால்பின்ஸ் அணிகள் மோதுகின்றன.        சென்னை அணி கடந்த முறை கோல்கட்டாவிடம் தோற்ற சோகத்தில் உள்ளது. டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் வலுவான அடித்தளம் அமைக்காமல் போனதே இதற்கு முக்கியக்காரணம்.  இவர்கள் பொறுப்புணர்ந்து விளையாட வேண்டும். ‘மிடில்–ஆர்டரில்’ ரெய்னா, டுபிளசி கைகொடுத்தால் நல்லது. கேப்டன் தோனி...

சாஸ்திரிக்கு சல்யூட் - வாயார பாராட்டுகிறார் தவான்

இந்திய அணியில் மாற்றத்தை ஏற்படுத்தினார் ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி. வீரர்களுக்கு தேவையான தன்னம்பிக்கை தந்தார்,’’ என, ஷிகர் தவான் பாராட்டினார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதையடுத்து பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டப்பட்டார்.  அணிக்கு புத்துயிர் அளிக்க, முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, ‘இயக்குனர்’ ஆக நியமிக்கப்பட்டார். உடனே களத்தில் குதித்த இவர், வலைப் பயிற்சியை நேரடியாக கண்காணித்தார்....

தோனிக்கு முதல் சோதனை - சென்னை கோல்கட்டா இன்று மோதல்

சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரில், இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில், தோனியின் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற காத்திருக்கிறது. உள்ளூர் ‘டுவென்டி–20’ தொடர்களில் சாதித்த அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா இணைந்து இத்தொடரை நடத்துகின்றன. இந்தியாவில் இருந்து ஐ.பி.எல்., சாம்பியன் கோல்கட்டா, பஞ்சாப், சென்னை என, மூன்று அணிகள் பங்கேற்கின்றன. ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ்,...

வருகிறது சச்சின் கோப்பை

சச்சின் பெயரில் டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர், முன்னாள் இந்திய கேப்டன் நவாப் அலி பட்டோடிக்கு பெருமை சேர்க்கும் வகையில், பட்டோடி டிராபி என்றழைக்கப்பட்டது.  இதில் மாற்றம் செய்யப்பட, இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர், இங்கிலாந்து மண்ணில் பட்டோடி டிராபி என்றும், இந்திய மண்ணில் ஆன்டனி டி மெலோ என்ற பெயரிலும் நடக்கிறது.  ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர், முன்னாள்...

இந்தியா மீண்டும் நம்பர் 1

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது.  சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.  சமீபத்தில் நாட்டிங்காமில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 114 புள்ளிளுடன் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டது.  பின்...

புத்துயிர் தந்த புதியவர்கள் - ரகானே உற்சாகம்

ஒருநாள் தொடருக்கு மட்டும் தேர்வான ரெய்னா, அம்பதி ராயுடு  உள்ளிட்ட புதிய வீரர்கள், இந்திய அணிக்கு புத்துயிர் தந்தனர்,’’ என, இளம் வீரர் அஜின்கியா ரகானே தெரிவித்தார்.       இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 1–3 என்ற கணக்கில் இழந்தது. பின், ரெய்னா, அம்பதி ராயுடு, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடித்தனர்.  இவர்களின் வரவால் இந்திய அணி புத்துயிர் பெற்றது. கார்டிப், நாட்டிங்காமில்...