ஏணி வைத்தாலும் எட்டாது - 632 மடங்கு அதிகம்

உலக கோப்பை தொடரின் அரையிறுதியுடன் திரும்பிய இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ. 5.4 கோடி கிடைத்தது. அதேநேரம் கடந்த 1983ல் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 18.8 லட்சம் தான் கிடைத்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் சமீபத்தில் உலக கோப்பை தொடர் நடந்தது. இதில் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ. 24.7 கோடி (லீக் சுற்று செயல்பாடு சேர்த்து) கிடைத்தது. பைனலில் வீழ்ந்த நியூசிலாந்து அணி ரூ. 12.6 கோடி பெற்றது. லீக் சுற்றில் தொடர்ச்சியான 6 வெற்றியுடன்...