சென்னை அணியை நீக்கலாம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி

பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல் ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதிநீக்கம் செய்யலாம்.  அணியின் உரிமையாளர்கள்  விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட விசாரணையில் இடம் பெற்றவர்கள் பி.சி.சி.ஐ., தேர்தலில் இருந்து விலகி இருக்க வேண்டும்,’ என, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தெரிவித்தது. இதையடுத்து மீண்டும் பி.சி.சி.ஐ., தலைவராகும் சீனிவாசனின் கனவு தகர்ந்தது.        ...

பிலிப் ஹியுஸ் உயிரை பறித்த பவுன்சர்

சர்வதேச கிரிக்கெட்டில் நேற்று கருப்பு நாளாக அமைந்தது. ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் தலையில் பலத்த காய­ம­டைந்த பிலிப் ஹியுஸ், கடைசி வரை நினைவு திரும்பாமல் மரணம் அடைந்தார். இதனால், கி­ரிக்கெட் உலகம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.                    ஆஸ்திரேலியாவில் நடக்கும் முதல் தர போட்டி ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடர். இதில் நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அப்போது, சியான் அபாட் வீசிய...

கேப்டன்ஷிப் சவாலை சந்திக்க தயார் - கோலி

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் வருகிற 4-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது.  விரல் காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் இந்திய கேப்டன் டோனி ஆடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் விராட் கோலி பிரிஸ்பேன் டெஸ்டுக்கு கேப்டனாக செயல்பட உள்ளார். அப்போது அவர் இந்தியாவின் 32-வது டெஸ்ட் கேப்டன்...

மறக்க முடியாத நினைவுகள் - கவாஸ்கர்

மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான வெளிநாட்டு பயணங்களில், விளையாட்டு வீரர்களை அழைத்துச் செல்வது என்பதை, இதற்கு முன் எந்த இந்திய பிரதமரும் நினைத்தது கூட கிடையாது.  முதன் முறையாக, ஆஸ்திரேலிய பயணத்தில் மோடி இதை செய்து காட்டினார்.  மெல்போர்ன் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சி தான் மிகவும் சிறப்பாக அமைந்தது. அப்போது எடுக்கப்பட்ட போட்டோவில், ‘கவாஸ்கர்–பார்டர்’ டிராபியை, ஆஸ்திரேலிய பிரதமர் அபாட்டும், அடுத்து 2015ம் ஆண்டுக்கான உலக கோப்பையை நமது...

பிரதமர் மோடியின் உலக கனவு - கபில் தேவ், கவாஸ்கர் பங்கேற்பு

வரும் 2015ல் உலக கோப்பை தொடரின் பைனலை நடத்த தகுதியான மைதானமாக மெல்போர்ன் திகழ்கிறது. இதில், இந்திய–ஆஸ்திரேலியா விளையாட வேண்டும்,’’என, பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார். ஆஸ்திரேலியா சென்ற இந்திய பிரதமர் மோடி ‘ஜி–20’ மாநாட்டில் பங்கேற்றார். நேற்று வரலாற்று சிறப்புமிக்க மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றார்.  161 ஆண்டு கால பாரம்பரியமிக்க மிகப் பிரமாண்டமான இம்மைதானத்தில் சுமார் 1 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காணலாம். இங்கு நடந்த...

விரக்தியில் விலகிய சேவக், காம்பிர்

இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் தியோதர் டிராபியில் இருந்து சேவக், காம்பிர் விலகினர்.       இந்தியாவின் அனுபவ துவக்க ஜோடி சேவக், 36, காம்பிர், 33. மோசமான ‘பார்ம்’ காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.         இதன் பின் உள்ளூர் போட்டிகளில் அதிகமாக சாதிக்கவில்லை. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில், இவர்கள் சேர்க்கப்படவில்லை.       தவிர,...

சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் தொடர் இன்று ஆரம்பம்

இந்திய டென்னிஸ் வளர்ச்சிக்கு வித்திட காத்திருக்கும் சி.டி.எல்., தொடர் இன்று துவங்குகிறது.                   கடந்த 2008ல் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடர் துவங்கப்பட்டது. இது பெரும் வரவேற்பை பெற, இந்தியன் பாட்மின்டன் லீக், கபடி லீக்,  ஹாக்கி லீக், கால்பந்து லீக் தொடர்கள் துவங்கப்பட்டன. இந்த வரிசையில் தற்போது டென்னிசும் சேர்ந்துள்ளது.             ...

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தை தத்தெடுத்தார் சச்சின்

ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டம்ராஜு கன்டிரிகா கிராமத்தை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தத்தெடுத்துள்ளார்.  இந்திய பிரதமர் மோடி, கிராமங்களை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கில் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். ஒவ்வொரு எம்.பி.,யும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவ வலியுறுத்தினார்.  இதன் படி கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சச்சின் ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டம்ராஜு கன்டிரிகா கிராமத்தை...

ரோகித் சர்மா உலக சாதனை - இந்திய அணி 404 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். தவிர, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக இரட்டைசதம் அடித்து அசத்தினார். இவரின் அதிரடி கைகொடுக்க இந்திய அணி 404 ரன்கள் குவித்தது.  இந்தியா வந்துள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. நான்காவது...

ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கு ஒத்திவைப்பு

ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கு விசாரணையை வரும் 14 ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது. ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் (2013) ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்ட வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நடத்திய விசாரணையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் ஒரு குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. இதில் நிலே தத்தா, நாகேஷ்வர ராவ், இந்திய...

இந்தியா உலக கோப்பை வெல்லும் - சச்சின் நம்பிக்கை

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது,’’ என, இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் நம்பிக்கை தெரிவித்தார்.  இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், 41. சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் உட்பட எண்ணற்ற சாதனைகள் படைத்தார். கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற இவர், ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை வௌியிட்டுள்ளார். அடுத்த ஆண்டு பிப்.14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில்...

ரெய்னாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு

துாய்மை இந்தியா திட்டத்தில் சேர இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரெய்னா, முகமது கைப் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  இந்தியாவை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், ‘துாய்மை இந்தியா’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி, கடந்த அக்., 2ல் துவக்கி வைத்தார்.  இத்திட்டத்தில் சேரும்படி சச்சின் போன்ற முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனை சச்சினும் ஏற்றுக் கொண்டார்.  தற்போது, உத்தரபிரதேசத்திலுள்ள வாரணாசி...

அடுத்த ஐ.பி.எல்., எப்போது?

எட்டாவது ஐ.பி.எல்., தொடர் வரும் 2015, ஏப். 8ம் தேதி துவங்குகிறது. கடந்த 2008 முதல் இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டால், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்படுகிறது.  அடுத்த ஆண்டு நடக்க உள்ள எட்டாவது தொடருக்கான தேதியை ஐ.பி.எல்., ஆட்சிமன்றக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ஏப்.8 முதல் மே 24 வரை தொடர் நடக்கவுள்ளது. தவிர, வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான கெடு வரும் டிச. 12ல் முடிகிறது.  இதன்படி, மும்பை வீரர்களான மைக்கேல் ஹசி, பிரவீண் குமாரை அணி நிர்வாகம் விடுவித்தது.  இவர்கள் எட்டாவது ஐ.பி.எல்.,...

இந்திய அணி தேர்வு ஒத்திவைப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் டிச., 4ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்ய இன்று மும்பையில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கூட்டம் கூடியது. இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்துக்குப் பின்பும், அணித்தேர்வு நடக்கவில்லை. காரணம் என்ன: தற்போது...