நேற்று 140 ரன்கள் எடுத்த கோஹ்லி (7 இன்னிங்ஸ், 639 ரன்கள்), ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரில், அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் பட்டியலில், முன்னாள் கேப்டன் டிராவிட்டை முந்தி முதலிடம் பிடித்தார்.
கடந்த 2003–04ல் ஆஸ்திரேலிய மண்ணில் டிராவிட், 619 ரன்கள் (8 இன்னிங்ஸ்) எடுத்திருந்தார். லட்சுமண் (494 ரன்கள், 2003), சச்சின் (493 ரன்கள், 2007) 3, 4வது இடத்தில் உள்ளனர்.
86 ஆண்டுக்குப் பின்...
நேற்று 4வது சதம் கடந்த விராத் கோஹ்லி, ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் 4 சதம் அடித்த மூன்றாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமை பெற்றார்.
இதற்கு முன், முன்னாள் இங்கிலாந்தின் சட்கிளிபே (1924–25), ஹேமண்டு (1928–29) ஆஸ்திரேலிய மண்ணில் பங்கேற்ற டெஸ்ட் தொடரில், தலா 4 சதம் அடித்தனர்.
தற்போது 86 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய மண்ணில், ஒரே தொடரில் நான்கு சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார் கோஹ்லி.
0 comments:
Post a Comment