Showing posts with label கைப்பந்து. Show all posts
Showing posts with label கைப்பந்து. Show all posts

அகில இந்திய கைப்பந்து கோப்பை அறிமுகம்

பதின்மூன்று முன்னணி அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.நெல்லை பிரெண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பனிமலர் எஞ்சினியரிங் கல்லூரி ஆதரவுடன் நடக்கும் இந்த போட்டிக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் பனிமலர் சுழற்கோப்பையை நடிகர் ஸ்ரீகாந்த் அறிமுகப்படுத்தினார்.அதில் பனிமலர் எஞ்சினியரிங் கல்லூரி இயக்குனர் சி.சக்திகுமார்,போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் மச்சேந்திரநாதன்,போலீஸ் டி.ஐ.ஜி.டேவிட்சன்,வருமான வரித்துறை உதவி இயக்குனர் நந்தகுமார்,சுங்கத்துறை உதவி கமிஷனர் தமிழ்வேந்தன்,போட்டி அமைப்பு குழு செயலாளர் ஏ.கே.சித்திரைப் பாண்டியன்,காளிமார்க் தனுஸ்கோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.