Showing posts with label செஸ். Show all posts
Showing posts with label செஸ். Show all posts

செஸ்: ஆனந்த் ஏமாற்றம்

ஜெர்மனியில் நடக்கும் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 2.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்தார். இதன்மூலம் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தூர்.

ஜெர்மனியில் உள்ள மெயின்ஸ் நகரில் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் ஆனந்த் (இந்தியா), அரோனியன் (அர்மேனியா), நெபோனியாட்சி (ரஷ்யா), நெய்டிட்ச் (ஜெர்மனி) உள்ளிட்ட நான்கு வீரர்கள் விளையாடுகின்றனர்.முதல் சுற்றின் முடிவில் ஒரே ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் இருந்த ஆனந்த், பைனலுக்கு முன்னேற இரண்டாவது சுற்றில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கினார்.

நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது சுற்றில் அரோனியன், நெபோனியாட்சி மற்றும் நெய்டிட்ச்ஆகியோருக்கு எதிரான ஆட்டத்தை "டிரா' செய்தார் ஆனந்த். இதன்மூலம் இவருக்கு 2.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடமே மிஞ்சியது. முதல் இரண்டு இடங்களில் இருந்த அரோனியன் (4.5 புள்ளி) மற்றும் நெபோனியாட்சி (3.5 புள்ளி) பைனலுக்கு முன்னேறினர். நெய்டிட்ச் 1.5 புள்ளிகளுடன் நான்காவது இடம் பிடித்தார்.