ஐ.சி.சி., நடத்தை விதிமுறையை மீறிய இந்தியாவின் இஷாந்த் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா தோற்றது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தை இந்தியாவின் இஷாந்த் சர்மா அவுட்டாக்கினார். அப்போது ஸ்மித்தை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி.,) நடத்தை விதிமுறையை மீறிய செயல். இத்தவறை இஷாந்த் ஒப்புக்கொண்டார். இதையடுத்து இவருக்கு போட்டி சம்பளத்திலிருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
சிக்கலில் ஸ்மித்:
இதே போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசவில்லை. 3 ஓவர் வரை தாமதமாக பந்துவீசியது.
இதற்காக கேப்டன் என்ற முறையில் ஸ்டீவன் ஸ்மித்திற்கு போட்டி சம்பளத்திலிருந்து 60 சதவீதம் மற்றும் சக வீரர்களுக்கு 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
அடுத்த 12 மாதங்களில் அணி தாமதமாக பந்துவீசிய பிரச்னையில் மீண்டும் ஸ்மித் சிக்கினால், ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.
0 comments:
Post a Comment