ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முரளி விஜய் சதம் அடித்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி இன்று பிரிஸ்பேனில் துவங்கியது.
காயத்திலிருந்து மீண்ட தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றார். இதனால் விக்கெட் கீப்பர் சகா நீக்கப்பட்டார். இந்திய அணியில் கரண் சர்மா, ஷமிக்குப்பதில் அஷ்வின், உமேஷ் இடம் பெற்றனர். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி ‘பேட்டிங’ தேர்வு செய்தது.
முரளி விஜய் சதம்:
இந்திய அணிக்கு தவான் 24 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் தமிழக வீரர் முரளி விஜய் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹேசல்வுட் ‘வேகத்தில்’ புஜாரா (18), கோஹ்லி (19) ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து அசத்திய முரளி விஜய் டெஸ்ட் அரங்கில் 5வது சதம் அடித்தார். தன் பங்கிற்கு ரகானே அரை சதம் அடித்தார். முரளி விஜய் 144 ரன்களில் வெளியேறினார்.
முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்தது. ரகானே (75), ரோகித் சர்மா (26) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட் 2 விக்கெட் வீழ்த்தினார்.
0 comments:
Post a Comment