விரைவில் "டி.ஆர்.எஸ்.,' முறைக்கு மூடுவிழா நடத்தப்படலாம்,'' என, முன்னாள் சர்வதேச அம்பயர் பொமி ஜமுலா தெரிவித்தார்.
அம்பயர்கள் முடிவை தொழில் நுட்பம் மூலம் மறுபரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்.,) முறைக்கு, துவக்கத்தில் இருந்தே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில இம்முறை பயன்படுத்தப்படுவதில்லை.
சமீபத்தில் முடிந்த ஆஷஸ் தொடர் முதல் டெஸ்டில், களத்தில் இருந்த அம்பயர்கள் வழங்கிய 13 முடிவுகளில், 8 தீர்ப்புகள் மூன்றாவது அம்பயரால் மாற்றப்பட்டது. இதனால், "டி.ஆர்.எஸ்.,' சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் (1990-1999) அம்பயர் பொமி ஜமுலா, 60, கூறியது:
தொழில்நுட்ப அடிப்படையில் செயல்படும் டி.ஆர்.எஸ்., முறை, பல்வேறு நேரங்களில் சிறப்பாக இருந்தது. ஆனால், அவ்வப்போது தவறுதலான தீர்ப்பும் தருகிறது. இன்னும் சில டெஸ்ட் போட்டிகளில் பார்க்கலாம்.
தொடர்ந்து தவறுகள் நேரும் பட்சத்தில், டி.ஆர்.எஸ்., முறையை தூக்கி எறிந்து விடவேண்டும்.
அதேநேரம், தொழில்நுட்பங்கள் அம்பயர்களுக்கு உதவியாகவும் அமையும். இதை பயன்படுத்தும் போது தான், மொழி காரணமாக சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. இவர்களுக்கு சிறப்பாக பயிற்சி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜமுலா கூறினார்.
0 comments:
Post a Comment