இலங்கைக்கு எதிரான உலக கோப்பை பைனலில்(2011, 50 ஓவர்) இலங்கைக்கு எதிராக சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் கேப்டன் தோனி.
இதே போல முத்தரப்பு பைனலிலும் சிக்சர் அடித்து கோப்பை பெற்று தந்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், போட்டியை வெற்றியுடன் முடிப்பதில் மிகச் சிறந்த வீரராக திகழ்கிறார் இந்திய அணியின் கேப்டன் தோனி.
2007ல் "டுவென்டி-20', 2011ல் <உலக கோப்பை, இம்முறை சாம்பியன்ஸ் டிராபி என, மூன்று வித கோப்பை வென்று தந்தார். இதுவரை 194 ஒருநாள் போட்டியில் பங்கேற்ற இவர், 21 இன்னிங்சில் களமிறங்கவில்லை.
மீதமுள்ள 173 இன்னிங்சில், 46 போட்டிகளில் அவுட்டாகாமல் இருந்துள்ளார். இதில் 43 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. வெற்றி சதவீதம் 93.5 ஆக உள்ளது.
பெவனை விட...: ஆஸ்திரேலியாவின் ஓய்வு பெற்ற வீரர் மைக்கேல் பெவன். 232 போட்டிகளில் பங்கேற்று, 196 இன்னிங்ஸ் பேட்டிங் செய்தார். இதில் 67 முறை அவுட்டாகாமல் இருந்தாலும், 13 போட்டிகளில் ஆஸ்திரேலியா தோற்றது. வெற்றி சதவீதம் 80.6 தான் உள்ளது.
சராசரி "100': தோனி விளையாடிய மொத்த இன்னிங்சில் (2005-2013), 72 போட்டிகளில் "சேஸ்' செய்து இந்தியா வெற்றி பெற்றது. இதில் தோனி 54 முறை பேட்டிங் செய்து, 33 முறை அவுட்டாகாமல் இருந்த இவர், மொத்தம் 2102 ரன்கள் எடுத்துள்ளார் (அதிகபட்சம் 183 ரன்கள்).
அதாவது தோனியின் "சேஸ்' சராசரி 100.09. இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் அர்னால்டு (91.00), இங்கிலாந்தின் இயான் மார்கன் (89.22) உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன், பேட்டிங் சராசரி கூட 99.94 தான் உள்ளது.
இயற்கை குணம்: இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் கூறியது:
முத்தரப்பு தொடரின் முதல் இரு போட்டிகளில் தோற்ற பின், மீண்டு வந்து கோப்பை வென்று கொடுத்துள்ளார் இளம் கேப்டன் தோனி. இந்த போராடும் குணம் அவருக்கு இயற்கையாக அமைந்துள்ளது. போட்டியின் எந்த ஒரு இடத்திலும் குழப்பம் அடையாமல், கடைசிவரை களத்தில் இருந்து, வெற்றி தேடித்தரும் இவரைப் போன்ற வீரரை, இதற்கு முன் ஒருபோதும் நான் பார்த்ததில்லை.
இவ்வாறு வெங்சர்க்கார் கூறினார்.
ரோகித் மகிழ்ச்சி: இந்திய வீரர் ரோகித் சர்மா கூறுகையில்,"" பல ஆண்டுகளாக தோனி, இப்படித் தான் வெற்றி தேடித்தருகிறார். இவர் களத்தில் இருக்கும் வரை எப்படியும் வெற்றி கிடைக்கும் என்று நம்பினோம். இதனால், முத்தரப்பு தொடர் பைனலில் வென்றதில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை,'' என்றார்.
0 comments:
Post a Comment