ஓய்வு முடிவை சச்சினிடம் விட்டு விடுங்கள்

சச்சின் ஓய்வு குறித்து யாரும் பேச வேண்டாம். எப்போது ஓய்வு பெறுவது என்பதை சச்சினிடம் விட்டுவிட வேண்டும் என, முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்ற அணியில் இடம் பெற்றிருந்த சச்சின், "பார்ம் பிரச்னையால் தொடர்ந்து ஏமாற்றினார். இதையடுத்து, ""கடந்த உலக கோப்பை தொடருடன் சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும், என, முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கிரண் மோரே, முன்னாள் விக்கெட் கீப்பர்:

அணியின் முக்கிய வீரராக சச்சின் இன்னும் உள்ளார். இவர் ஓய்வு பெற வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை ஏற்க முடியாது. இந்திய கிரிக்கெட்டில் வியத்தகு சாதனைகள் படைத்துள்ள இவருக்கு நெருக்குதல் தரக்கூடாது. ஓய்வு குறித்த முடிவை அவரிடம் விட்டுவிட வேண்டும்.


குண்டப்பா விஸ்வநாத், முன்னாள் கேப்டன்:

சச்சின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து முடிவு செய்ய வேண்டியது அவர் தான். இதை நான் எப்போதும் சொல்லி வந்துள்ளேன். இந்திய கிரிக்கெட் இப்போதுள்ள சூழ்நிலையில் இதுகுறித்து எவ்வித கருத்தும், ஆலோசனையும் சொல்ல விரும்பவில்லை.


பிஷன் சிங் பேடி:

கபில் தேவ் தெரிவித்தது அவரது கருத்து. ஓய்வு பெறும் நாள் எது என்பதை தேர்வு செய்யும் உரிமை சச்சினுக்கு உள்ளது. அணியில் அவரது இடம் குறித்து கருத்துசொல்ல யாரும் இங்கே இருப்பதாக நான் நினைக்கவில்லை.


அன்ஷுமன் கெய்க்வாட்:

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஏன் விலக வேண்டும் என்பதற்கு, சரியான காரணம் ஒன்றை சொல்லுங்கள் பார்க்கலாம். 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வருகிறார் அல்லது தனது 100வது சதத்துக்காக விளையாடுகிறார் என்றால், போட்டிகளில் சராசரியாக 40 அல்லது 50 ரன்கள் எடுக்கிறாரே.

இவருக்கு மாற்றாக எந்த இளம் வீரர் இப்போது உள்ளார். இதை தெரிவித்துவிட்டு, சச்சினை பின் அனுப்புங்கள். ஏனெனில், இப்போதுள்ள இளம் வீரர்கள் நிலைத் தன்மை இல்லாமல், தாறுமாறாக விளையாடுகின்றனர். இதுதான் உண்மை.

0 comments:

Post a Comment