இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா, தரை மட்டத்தில் இருந்து 6,800 அடி உயரத்தில் உள்ளது. இங்கு வீரர்களை ஏற்றிச் செல்ல விமான நிறுவனங்கள் மறுக்கின்றன.
இங்கு விமானம் தரையிறங்கும் இடம் சிறியது என்பதால், மிகவும் துல்லியமாக, தரையிறக்க வேண்டும். தவிர, இரவில் தரையிறங்கும் வசதி கிடையாது.
சாலை வழியாக செல்லலாம் எனில், 5 மணி நேரம் பஸ்சில் செல்ல வேண்டும் என்பதால், இந்த திட்டத்தை கைவிட்டனர்.
உறுதி இல்லை: வேறு வழியில்லாத நிலையில், ஆந்திரா கிரிக்கெட் சங்கத்தை தொடர்பு கொண்ட பி.சி.சி.ஐ., விசாகப்பட்டின மைதானத்தை தயார் நிலையில் வைத்திருக்குமாறு தெரிவித்துள்ளது.
ஆனால், தொடர் மழை காரணமாக, இங்கு மூன்றாவது ஒருநாள் போட்டி(அக்., 14) நடப்பதே கேள்விக்குறியாக உள்ளது.
டிக்கெட் தயார்
இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க செயலர் மோகித் சூட் கூறுகையில்,‘‘ தரம்சாலாவில் போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடக்கின்றன.
டிக்கெட்டுகள் அச்சடித்து விற்பனைக்கு தயாராக உள்ளன. போட்டியை இங்கு நடத்த முடியாது என்று கூறுவதற்கே இடமில்லை,’’ என்றார்.
0 comments:
Post a Comment