சச்சின் பெயரில் டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர், முன்னாள் இந்திய கேப்டன் நவாப் அலி பட்டோடிக்கு பெருமை சேர்க்கும் வகையில், பட்டோடி டிராபி என்றழைக்கப்பட்டது.
இதில் மாற்றம் செய்யப்பட, இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர், இங்கிலாந்து மண்ணில் பட்டோடி டிராபி என்றும், இந்திய மண்ணில் ஆன்டனி டி மெலோ என்ற பெயரிலும் நடக்கிறது.
ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர், முன்னாள் கேப்டன்கள் பார்டர்–கவாஸ்கர் பெயரில் நடத்தப்படுகிறது.
தற்போது, கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’, இந்தியாவின் சச்சின் பெயரில், டெஸ்ட் தொடர் நடத்த, கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், இதுகுறித்து சில நிர்வாகிகள் பேசியுள்ளனர்.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறியது:
இப்போதைய நிலையில், இதுகுறித்து பேசுவது மிகவும் அவசரமான செயல். ஒரு தொடருக்கு பெயர் வைக்கும் முன், அது குறித்து, சம்பந்தப்பட்ட அணியிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
சச்சின் பெயர் வைப்பதாக இருந்தால், அந்த டெஸ்ட் தொடர் மிகவும் மதிப்பு மிக்கதாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.
இவ்வாறு சஞ்சய் படேல் கூறினார்.
0 comments:
Post a Comment