உலககோப்பையை மீண்டும் இந்தியா கைப்பற்றும்



இந்திய அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை வென்று கொடுத்தவர் கபில்தேவ். 1983–ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. 

அதற்கு பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.

இந்த நிலையில் உலக கோப்பையை இந்திய அணி தக்கவைத்துக் கொள்ளும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:–

உலக கோப்பையை இந்திய அணி மீண்டும் கைப்பற்றும் சமீபத்தில் வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி வெற்றி பெறுவதே இதற்கு காரணம்.

சாம்பியன்ஸ் டிராபியை வென்று அணிக்கு மிகப் பெரிய பலத்தை ஏற்படுத்தியதாக கருதுகிறேன். அணி வீரர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐ.பி.எல். போட்டியில் வெளிநாட்டு வீரர்களுடன் ஆட்ட நுணுக்கங்களை பரிமாறி கொண்டது இந்திய வீரர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவது கடினமானது. அங்குள்ள தட்பவெப்ப நிலை இந்தியாவில் உள்ளதை போல் இருக்காது. ஆனாலும் உலக கோப்பையை அடுத்தடுத்து கைப்பற்றக் கூடிய திறமை இந்திய அணிக்கு உள்ளது.

டோனி தலைமையிலான இந்திய அணி தற்போது சிறப்பான நிலையயில் இருக்கிறது. ரவிந்திர ஜடேஜா நன்றாக ஆடுகிறார்.

1992–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் அந்தப்போட்டி தொடரில் பாகிஸ்தானை ‘லீக்’ ஆட்டத்தில் வீழ்த்தியது என்னால் மறக்க முடியாத ஒன்றாகும். நாங்கள் தோற்கடித்த பாகிஸ்தான் அணி தான் உலக கோப்பையை வென்றது. இதனால் இந்த வெற்றியை சிறப்பானதாக உணர்கிறேன்.

1992–ம் உலக கோப்பையில் தான் எல்லா மாற்றமும் கொண்டு வரப்பட்டது. கலர் உடையில் வீரர்கள் விளையாடியதும் மறக்க இயலாது. ஒவ்வொரு அணியும் கலர் உடையில் விளையாடியது பெருமை அளித்தது.

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment