1992 உலகக் கோப்பையில் மார்ச் 18-ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது இங்கிலாந்து. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் கிரகாம் கூச் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
இங்கிலாந்தின் இயன் போத்தம், ரிச்சர்டு இல்லிங்வொர்த் ஆகியோரின் அதிரடி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அந்த அணியின் கேப்டன் டேவ் ஹட்டன் 29 ரன்களும், குட்சர்ட் 24 ரன்களும் எடுத்தனர். இதனால் அந்த அணி 46.1 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடிய இங்கிலாந்து வீரர்கள் ஜிம்பாப்வேயை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற அபரிமிதமான நம்பிக்கையோடு களமிறங்கினர். ஆனால் தொடக்க வீரர் கிரகாம் கூச் ரன் ஏதுமின்றியும், போத்தம் 18, லாம்ப் 17, ஸ்மித் 2, ஹிக் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க 5 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது இங்கிலாந்து.
பின்னர் வந்த ஃபேர்பிரதர் 20 ரன்களும், ஸ்டூவர்ட் 29 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் 100 ரன்களை எட்ட உதவினர். ஆனாலும் அந்த அணி 49.1 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது இங்கிலாந்து.
1999 உலகக் கோப்பையில் மே 31-ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் கோப்பையை வெல்லக்கூடிய அணியாகக் கருதப்பட்ட வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கத்துக்குட்டியான வங்கதேசத்தை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் சயீத் அன்வர் 9, அப்ரிதி 2, இஜாஸ் அகமது 0, இன்சமாம் உல் ஹக் 7, சலீம் மாலிக் 5 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி 44.3ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன்மூலம் வங்கேதச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தது. இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதிச்சுற்றுவரை முன்னேறி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.
ஒரு இணையத்தளம் ஒன்றை நாம் ஆரம்பித்துள்ளோம்.. அது தொடர்பாக பேசவேண்டும்.. உங்கள் மின்னஞ்சல் முகவரியை பெற முடியவில்லை... mathurahan@gmail.com இற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்க முடியுமா.
ReplyDelete