சச்சினுடனான சந்திப்பை மறக்க முடியாது

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்று ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் பிலிப் ஹக்ஸ் கூறினார்.

இதுகுறித்து மெல்போர்னில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

மும்பையிலுள்ள ஹோட்டலில் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துப் பேசினேன். இதை என் வாழ்நாளில் மறக்கமுடியாது.

நான் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன். அவர் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். எனது குடும்பம் குறித்தும் சச்சிந் கேட்டார் என்றார் அவர்.

சச்சினுடன் அவர் என்ன பேசினார் என்ற விவரங்களைத் தெரிவிக்க ஹக்ஸ் மறுத்துவிட்டார்.

தரவரிசை: சானியா முன்னேற்றம்

டென்னிஸ் வீராங்கனைகள் தர வரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 74-வது இடத்திலிருந்து 63-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

யு.எஸ். ஓபனில் 2-வது சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் அவர் கூடுதல் புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் முன்னேறியிருக்கிறார்.

இரட்டையர் தர வரிசையில் இந்திய வீரர் லியாண்டர் பயஸ் 8-வது இடத்தில் இருக்கிறார். மகேஷ் பூபதி 6-வது இடத்தில் உள்ளார்.

ஒற்றையர் தர வரிசையில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் 133-வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் வரிசை: இந்தியா மீண்டும் 2-வது இடத்தை பிடித்தது

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன்பு இந்தியா தர வரிசையில் 2-வது இடத்தில் இருந்தது. 3 ஆட்டத்திலும் வென்றால் இந்தியாவுக்கு “நம்பர் ஒன்” இடம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது. இதனால் முதல் முறையாக முதலிடத்தை பிடித்தது. 24 மணி நேரமே இந்த நிலை நீடித்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக தோற்றதாலும் ஆஸ்திரேலியா தொடர்ந்து வெற்றி பெற்றதாலும் இந்திய அணி 3-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி சாம் பியன் பட்டம் பெற்றதால் தர வரிசையில் மீண்டும் 2-வது இடத்தை (125 புள்ளிகள்) பிடித்தது.

தென் ஆப்பிரிக்கா 127 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்தி ரேலியா 125 புள்ளி களுடன் 3-வது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துடன் இன்னும் 3 ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும்

உசைன் போல்ட் வெற்றி

கிரீசில் நடந்த உலக தடகள தொடரில் ஜமைக்காவின் உசைன் போல்ட், 200 மீ.,ஓட்டத்தில் தங்கம் வென்றார். கிரீசின் திசலோனிகி நகரில் உலக தடகள தொடர் நடக்கிறது. இதில் 200 மீ., பைனலுக்கு ஜமைக்கா வீரர், ஒலிம்பிக் சாம்பியன் உசைன் போல்ட் தகுதி பெற்று இருந்தார்.

நேற்று நடந்த பைனலில் உசைன் போல்ட், 19.68 வினாடிகளில் கடந்து, தங்கம் வென்றார். அமெரிக்காவின் வாலஸ் ஸ்பியர்மேன் (20.21 வினாடி), ஆன்டிகுவாவின் பிரன்டன் கிறிஸ்டியன் (20.65 வினாடி) அடுத்த இரண்டு இடங்களை பிடித்தனர்.

இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில்,"" நான் வேகமாகத்தான் ஓட விரும்பினேன். ஆனால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதால், உண்மையில் நான் சோர்வாக இருக்கிறேன். இப்போதைக்கு ஓய்வு தான் தேவைப்படுவதால் அடுத்து எந்த போட்டியிலும் பங்கேற்பதாக இல்லை,'' என்றார்.

100 மீ., ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கர்மெலிட்டா ஜெட்டர், 10.67 வினாடிகளில் ஓடிவந்து தங்கத்தை கைப்பற்றினார். இது மூன்றாவது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 1988ல் அமெரிக்காவின் கிரிபத் ஜாய்னர் (10.49), 1998ல் மரியன் ஜோன்ஸ் (10.65) முதல் இரு இடங்களில் உள்ளனர்.

சச்சின், ஹர்பஜன் அபாரம்: இந்தியாவுக்கு கோப்பை

சச்சின் டெண்டுல்கரின் அதிரடி சதம், ஹர்பஜன் சிங்கின் அபார பந்துவீச்சால் இலங்கையை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா "காம்பேக்' கோப்பையைத் தட்டிச் சென்றது.

முத்தரப்பு நாடுகள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் திங்கள்கிழமை கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாûஸ வென்ற இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய இலங்கை 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. இந்திய இன்னிங்ஸின்போது துவக்க ஆட்டக்காரர்களாக சச்சின், திராவிட் களமிறங்கி அதிரடியாக ஆடினர். சிறப்பாக விளையாடிய திராவிட் 39 ரன்கள் எடுத்தார்.

2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனியும், சச்சினும் சிறப்பாக ஆடிய 110 ரன்கள் குவித்தனர். தோனி 62 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.

சச்சின் சிறப்பாக விளையாடி ஒருநாள் போட்டிகளில் தனது 44-வது சதத்தைப் பதிவு செய்தார். இலங்கைக்கு எதிராக அவர் எடுக்கும் 8-வது சதமாகும் இது.

அவர் மொத்தம் 133 பந்துகளில் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 10 பெüண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். தொடர்ந்து வந்த யூசுப் பதான் ரன் எடுக்காமலும், சுரேஷ் ரெய்னா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருந்தபோதும் மறுமுனையில் யுவராஜ் பெüண்டரிகளாக விளாசி அணியின் ஸ்கோர் 300-ஐத் தாண்ட உதவினார்.

ஆட்ட முடிவில் யுவராஜ் ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், விராட் கோலி 2 ரன்களும் எடுத்திருந்தனர்.

பின்னர் இலங்கை இன்னிங்ஸின்போது தில்ஷனும், ஜயசூர்யாவும் அதிரடியாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்தனர். இருந்தபோதும் தில்ஷனை 42 ரன்களில் அவுட்டாக்கினார் ஹர்பஜன். தொடர்ந்து வந்த ஜயவர்த்தனாவையும் ஒரு ரன்னில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார் ஹர்பஜன். தொடர்ந்து ஜயசூர்யா 36 ரன்களிலும், துஷாரா 15 ரன்களிலும், மாத்யூஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சங்ககரா 33 ரன்கள் எடுத்திருந்தபோது ஆர்.பி. சிங் பந்துவீச்சில் "ஹிட்-அவுட்' முறையில் ஆட்டமிழந்தார். இதனால் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தத்தளித்தது.

இருப்பினும் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கபுகடேராவும், கண்டம்பியும் 70 ரன்கள் சேர்த்தனர். இருந்தபோதும் ஹர்பஜனின் அனல்பறக்கும் பந்துவீச்சில் இலங்கையின் விக்கெட்டுகள் சரிந்தன. கண்டம்பி மட்டும் நிலைத்து ஆடி 66 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 46.4 ஓவர்களில் இலங்கை 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஹர்பஜன் 56 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

சச்சின் ஆட்டநாயகனாகவும், தொடர்நாயகனாவும் தேர்வு பெற்றார்.

11 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்

இலங்கையில் 1998-ம் ஆண்டு நடந்த முத்தரப்பு நாடுகள் போட்டியில் இந்தியா சிங்கர்-நிடாஸ் கோப்பையைக் கைப்பற்றியது. அந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சச்சின், கங்குலி இருவரும் சதமடித்தனர்.

இதையடுத்து தற்போது நடைபெற்ற காம்பாக் கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வென்றது. மீண்டும் சச்சின் சதமடித்து அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தார்.

இந்தியா: 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 319

(சச்சின் 138, திராவிட் 39, தோனி 56, யூசுப் பதான் 0, ரெய்னா 8, யுவராஜ்சிங் (அவுட் இல்லை)56, கோலி (அவுட் இல்லை)2, துஷாரா 2வி-71, மலிங்கா 1வி-81, மெண்டிஸ் 1வி-70, ஜயசூர்யா1வி-43.

இலங்கை: 46.4 ஓவர்களில் 273

(தில்ஷன் 42, ஜயசூர்யா 36, ஜயவர்த்தனா 1, சங்ககரா 33, துஷாரா 15, மாத்யூஸ் 14, கண்டம்பி 66, கபுகடேரா 35, குலசேகரா (அவுட் இல்லை) 9, மலிங்கா 0, மெண்டிஸ் 7, இஷாந்த் சர்மா 1வி-51, ஆர்பி சிங் 1வி-34, ஹர்பஜன் சிங் 5வி-56, பதான் 1வி-36, யுவராஜ் சிங் 1வி-24, ரெய்னா 1வி-26)